மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

வங்ககடலில் உருவனா காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக வலுபெற்று மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே கடந்த 26-ம் தேதி நள்ளிரவில் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கடலோரப் பகுதிகளில் சுமார் 30,000 வீடுகள் சேதமடைந்தன. 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வடகிழக்கு மாவட்டங்களில் தற்போது வரை கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். கல்குவாரி விபத்தில் மிசோரத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தவிர, மற்றவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி