தரை தளத்தில் கற்கள் பதிக்கும் பணியால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கிரி பிரகாரம் சுற்ற முடியாத பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாகப்பணிகளின் ஒரு பகுதியாக தரை தளத்தில் கற்கள் பதிக்கும் பணி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் கிரி பிரகாரம் சுற்ற முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் முடிக்கப்பட உள்ளது. திருவிழாவிற்கு பிறகு கோயிலின் தெற்கு மற்றும் மேற்கு பிரகார தரைத்தளம் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளுக்காக முதற்கட்டமாக கிழக்கு பிரகாரத்தில் தரைத்தளத்தில் கற்கள் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது.

இதற்காக வடக்கு வாசல் அருகே பக்தர்கள் வெளியே வரும் பாதையில் இருந்து கிழக்கு பிரகாரத்திற்கு செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக திருச்செந்தூர் கோயிலில் சண்முக விலாசம் பகுதியாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியேறிய பிறகு பிரகாரத்தை சுற்றி கடற்கரையை பார்த்துவிட்டு திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது வடக்கு வாசல் வழியாக வெளியேறும் பக்தர்களை அங்கு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகள் எதிர் திசையில் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பக்தர்கள் கோயில் கிரிபிரகாரம் சுற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிந்து பிரகாரம் சுற்றி வருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்