மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள் திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பதிலடி

புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிறைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்திருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பது, அதுவே நம்முடைய கருத்தாகவும் எடுத்துக்கொள்ளலாம். திமுகவை திருமாவளவன் மிரட்டுவதாக எல்.முருகன் கூறி வருகிறார். எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட முடியாது. திமுகவை எந்த கட்சியும் மிரட்ட முடியாது. மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள்.

திமுக எந்த மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல. எங்களை நம்பி வந்தவர்களை நாங்கள் மோசம் செய்ய மாட்டோம். அவர்களுக்கு உண்மையான நண்பராக இருப்பவர் தான் முதலமைச்சர். தோழமை கட்சிகளுக்கான மரியாதையை இந்தியாவிலேயே எந்த கட்சியும் கொடுக்காத வகையில் மரியாதை கொடுப்பவர் நம்முடைய முதலமைச்சர். அதனால் திருமாவளவன் எங்களை மிரட்ட மாட்டார்.வழக்குகள் இல்லாமல் யாரையும் நாங்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்வது கிடையாது.

ஓரிரு இடங்களில் தவறு நடந்திருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தால் அந்த தவறை நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக உள்ளோம். மகாவிஷ்ணு விவகாரத்தில் வெளிநாடுகளில் இருந்து பணம் அவருக்கு வந்துள்ளதாக தகவல் தெரிந்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். வெளிநாட்டு பண விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி