சிறுபான்மையினர் மீது ஒன்றிய அரசு பாராமுகமாக இருப்பதால் அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவு: முதல்வர்

சென்னை: சிறுபான்மையினர் மீது ஒன்றிய அரசு பாராமுகமாக இருப்பதால் அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியது. கல்வி உதவித்தொகையை நிறுத்தியதை எதிர்த்து 2022 டிசம்பர் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். பா.ஜ.க அரசு நிறுத்திய உதவித்தொகை இனி தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும்.சிறுபான்மையினரின் சமூக – கல்வி- பொருளாதார வளர்ச்சி, அடிப்படை உரிமைகளுக்கு என்றும் துணைநிற்பது திமுக அரசுதான்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்