மினிவேன் கவிழ்ந்து விபத்து


ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் விவசாயத்திற்காக சாலை ஓரத்தில் கால்வாய் தோண்டி மண்ணை ஓரமாக கொட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று திருபெரும்புதூர் நோக்கி சென்றது.

அப்போது பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக கால்வாய் தோண்டிய மண் மீது வாகனத்தை டிரைவர் ஏற்றியுள்ளார். அப்போது அதில் இருந்த கல் மீது ஏற்றியதில் வேன் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு