வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை தலைமை அதிகாரியாக கோவேந்தனுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தனுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. கோவேந்தன் கடந்த 2009ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021ம் ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் பூடானில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அவர் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் 2021, ஜூலை 27ம் முதல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது பணி சிறப்பாக இருப்பதால் தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியுறவு அமைச்சகக் கிளைச் செயலகத்தின் முந்தைய தலைவர் டாக்டர் எம். வெங்கடாசலம் (ஐ.எஃப்.எஸ்), இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள இந்தியத் துணைத் தூதராக நியமிக்கப்பட்டு அந்தப் பணிக்கு சென்றதையடுத்து இந்தப் பொறுப்பில் கோவேந்தன் நியமிக்கப்பட்டார். இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு