அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்கவேண்டும்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ அழைப்பு

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, மற்றும் பேரூர் இளைஞரணி செயல்வீரர்கள் சார்பில் ஆவடியில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மதுரையில் ஒற்றை சிலம்பை தம் கையில் ஏந்தி நீதி கேட்டாள் கண்ணகி, அதே மதுரையில் ஒற்றைச் செங்கல்லை எடுத்து கல் இங்கே? எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என்று ஒன்றிய அரசுக்கு கேள்விக்கணை எழுப்பி தேசம் அதிர நீதி கேட்டவர் உதயநிதி ஸ்டாலின். தமிழக மாணவ, மாணவிகள் மருத்துவ கனவு நீட் தேர்வினால் சிதைந்து போவதை எண்ணி மனம் வருந்தி ஒன்றிய அரசுக்கு ஏதிராக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடத்தி தன் எதிர்ப்பை தமிழ மக்களின் நெஞ்சங்களில் பதிவு செய்தவர் உதயநிதி ஸ்டாலின்.

எனவே இந்த மாபெரும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களை அழைத்து வெண் சீருடை அணிந்து, வாகனங்கள் ஏற்பாடு செய்து பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.

 

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு