அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை தொழில் நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன

சட்டப் பேரவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அனைத்து தொழில் துறைகளில் உள்ள நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. நிதி நெருக்கடி இருந்தாலும் இங்கே தொழில் துறை பாதுகாப்பாக இருக்கிறது. சேலத்திலும் ஒரு டைடல் பார்க் வர உள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் உதவிகளை ஒன்றிய அரசின் வழியாக தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஜிடிபி 13.74 சதவீதமாக நடப்பு ஆண்டில் வளர்ந்து பொருளாதாரம் மிக்கதாக உள்ளது. ஒன்றிய அரசை விட தமிழ்நாடு ஜிடிபி 3 மடங்கு உயர்ந்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3 வது இடத்துக்கு வந்துள்ளோம். ஏற்றுமதியிலும் 3வது இடத்தில் உள்ளோம். அந்நிய முதலீடுகளை பொறுத்தவரையில் சுமார் 4 ஆயிரம் டாலர் அளவுக்கு தமிழ்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். ரூ.3.90 லட்சம் கோடி மதிப்பீட்டு அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா