அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடங்கிய 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அனைத்து ஆவணங்களும் இரும்பு ட்ரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக் காவல் கேட்கவில்லை, அது நிராகரிக்கப்படவும் இல்லை என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜாமின் கோரி 16ம் தேதிக்கு பிறகு மனு தாக்கல் செய்யப்படும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்