அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு சந்திரயான்-3 குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்

சென்னை: தமிழ்க் கூடல் திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள 162 பள்ளிகளுக்கு தலா ரூ.9,000 வழங்கும் நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தலைமை ஆசிரியர்களுக்கு காசோலைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ‘தமிழ்க்கூடல்’ என்ற ஒரு திட்டம் சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 6218 உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்கும் தலா ரூ.9 ஆயிரம் ஒதுக்கப்பட்டு வருடத்துக்கு 3 முறை இந்த தமிழ்க் கூடல் மூலம் தமிழ் மன்றங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 162 பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலா ரூ.9 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லும் மாணவர்களில் 4ம் தேதி ஒரு பகுதியினர் மலேசியா, சிங்கப்பூர் செல்கின்றனர். அதற்கு அடுத்த மாதம் ஒரு பகுதி மாணவர்கள் செல்கின்றனர். சந்திரயான்-3 திட்டம் அதன் வெற்றி குறித்து பள்ளிப் பாடங்களில் அடுத்த ஆண்டு சேர்க்கப்படும். இந்த திட்டம் அதிக அளவில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்தவர்கள் செயலாற்றியுள்ளனர். இது பெருமையான விஷயம். பள்ளி மாணவர்களுக்கான உளவியல் பயிற்சி அளிக்க நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பாக்கு தோப்பில் முகாமிட்ட யானைகள் டிரோனில் கண்காணித்து விரட்டியடிப்பு

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த இலங்கை படகு

கஞ்சா புகைப்பது போல் ரீல்ஸ்: 6 இளைஞர்கள் கைது