இது மாநிலங்களை காப்பதற்கான தேர்தல் என்பதை உணர்ந்து வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை – ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்றைய தினமும் நடைபெற்றது. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம்.

விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்டக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய – நகர – பேரூர் நிர்வாகிகள், கழகத்தின் உள்ளாட்சி பிரநிதிகளிடம், தொகுதியில் தற்போது நிலவும் சூழலை விரிவாக கேட்டறிந்தோம். நடைபெற இருப்பது மக்களவைத் தேர்தல் என்றாலும், இது மாநிலங்களை காப்பதற்கானத் தேர்தல் என்பதை உணர்ந்து வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு