அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு ஐ.டி. மற்றும் ஈ.டி. உடன்தான் ஒன்றிய அரசு கூட்டணி

சென்னை: ஒன்றிய அரசு ஐ.டி., ஈ.டி.., அமைப்புகளுடன் தான் கூட்டணி அமைத்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி பேசினார். திருவள்ளூரில் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டின் வரிப்பணம் 5 லட்சம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.2 லட்சம் கோடிதான். பாஜ அல்லாத மாநிலங்களை ஒன்றிய அரசு பழி வாங்குகிறது. ஒன்றிய அரசு ஐ.டி., ஈ.டி.. உடன்தான் கூட்டணி வைத்து இருக்கிறார்கள்.

கடந்த 2 நாட்களாக அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி மிரட்டி வருகின்றனர். பிரதமரை மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம். ஈ.டி..யைப் பார்த்தும் பயப்பட மாட்டோம். திமுகவின் முன்னணித் தலைவர்கள் அல்ல. கிளை செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள். மருத்துவம் பயில நுழைவுத் தேர்வை முதலில் ரத்து செய்தவர் கலைஞர். ஆனால் அதை தமிழகத்தில் கொண்டு வந்தது அதிமுகதான். இந்த நீட் தேர்வால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தற்கொலை அல்ல, கொலை. இதற்கு பாஜகவும், அதிமுகவும் தான் கராணம். நீட் என்பது திமுகவின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது.

ஒட்டு மொத்த மாணவர்களின் பிரச்னை. 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெற்று டிசம்பர் மாதம் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைரிடம் ஒப்படைக்க உள்ளோம். இணையதளத்திலும் பதிவு செய்யலாம், ஜல்லிக்கட்டு போன்று நீட்தேர்வையும் நம்மால் வெற்றி பெற முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ராணிப்பேட்டை ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பி க்கள் தயாநிதி மாறன், டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!