46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 14 முதலீடுகளுக்கு ஒப்புதல் : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : மின்னணு, பாதுகாப்பு, செல்போன் உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் 14
முதலீடுகள் வந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா அளித்த பேட்டியில், “46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.38,600 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கிரீன் டிரெண்டிங் தொழிற்சாலை அமைக்கிறது. காஞ்சிபுரத்தில் பாக்ஸ்கானின் துணை நிறுவனமான யுசான் டெக்னாலஜி ரூ.13,180 கோடியில் ஆலை அமைக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக அறிவிப்பு