அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆலோசனை கூட்டம்

சென்னை: அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், ஆணையர் அலுவலகத்தில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருதல், இரண்டு நாள் மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உறுதிசெய்தல், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்யும் பணிகள், மாநாடு குறித்து நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் பணிகள்.

மாநாட்டு அரங்கங்களின் வடிவமைப்பு மற்றும் அறுபடை வீடு கண்காட்சி அரங்கு தொடர்பான பணிகள், மாநாட்டு வளாகத்தில் ஏற்படுத்தப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர் தயாரித்தல் போன்ற பணிகள் குறித்து ஆலோசனை ேற்கொள்ளப்பட்டன. இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்ைம செயலாளர் சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் கலந்துகொண்டனர்.

Related posts

பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ம் தேதி திருவள்ளூரில் தொடங்கி வைக்கிறார்: பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றிகண்டுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம்