சென்னை , கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (12.06.2023) சென்னை, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது திருக்கோயில்கள் சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை தொடங்கி வைத்தார்.

கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com, BBA., BCA, B.Sc computer Science ஆகிய பட்டப்படிப்புகளும், சைவ சித்தாந்த சான்றிதழ் படிப்பும் பற்றுவிக்கப்படுகிறது. தற்போது இக்கல்லூரியில் 445 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கு 240 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர்.

இம்மாணவ, மாணவியருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் இந்து2சமய2அறநிலையத்துறை11ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) சி.ஹரிப்ரியா, எவர்வின் பள்ளியின் தாளாளர் பா.புருஷோத்தமன், சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, கல்லூரியின் செயலாளர் / இணை ஆணையர் க.பெ.கவேனிதா, கல்லூரி முதல்வர் சி.லலிதா, மாநகராட்சி மன்ற உறுப்பினர் யோகப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர்