அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு திட்டவட்ட மறுப்பு!!

சென்னை :அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை பற்றி திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள்.திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்து சமய அறநிலையத்துடை தொடங்கப்பட்டது.

1818ல் தொடங்கி பல்வேறு கட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் 1951ல் இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. பரம்பரை அறங்காவலர்கள் தவறான முறையில் கோவில் சொத்துகளை பயன்படுத்துவதை தடுக்கவே அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டது. திமுக அரசு பதவியேற்றவுடன் குறைகளை பதிவிடுக என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைகளை பதிவிடுக திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டன. கோவில்கள், பக்தர்களுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திமுக அரசு செய்து வருகிறது. 48 கோவில்கள் முதுநிலை கோவில்களாக அடையாளம் காணப்பட்டு அங்கு நடைபெறும் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. 48 கோவில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சூரசம்ஹர நிகழ்ச்சியில் 8 லட்சம் பேர் ஒரே நாளில் பங்கேற்றனர். 8 லட்சம் பேர் பங்கேற்றபோதும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செயல்பட்டன.

திருச்செந்தூரில் சூரஸம்ஹார விழாவில் ஒரு சங்கிலி பறிப்பு நிகழ்வு கூட நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருச்செந்தூர் கோவிலில் ரூ. 300 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 14,000 கோவில்களில் பணியாற்றும் 17,000 அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 5000 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் நிர்வாகத்திற்கான மானியம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளாக சிதிலமடைந்த நெல்லையப்பர் கோவில் வெள்ளி தேரை சீரமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.48 கோவில்களின் தேர்களை மராமத்து செயய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,”என்றார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா