அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் முதல்கட்டமாக 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் 47 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்த வழக்கு, சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அமைச்சர் சார்பில் வழக்கறிஞர்கள் மா.கவுதமன், என்.பரணிகுமார் ஆஜராகினர். அப்போது, அமைச்சர் உள்ளிட்டோருக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி, கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, 100 பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும். நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனை..!!

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்