சென்னை : இந்து- இஸ்லாமிய உறவுமுறை குறித்த விழிப்புணர்வு புத்தகம் முதல்வர் அனுமதியுடன் வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து, இஸ்லாமிய நல்லுறவை வெளிப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் உள்ளன என்றும் எந்த நடைமுறையையும் தகர்க்க நினைப்போரை வீழ்த்தும் சக்திதான் திராவிட மாடல் அரசு என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.