அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு ராமேஸ்வரம் தீவு சுற்றுலா பகுதிகள் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்

சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் பதிலளித்து பேசிய பின்பு வெளியிட்ட அறிவிப்புகள்: ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்படும். தமிழக கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.1 கோடியில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்்ள ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபடப் புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4கோடியில் மேம்படுத்தப்படும்.

Related posts

69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்புமணி வலியுறுத்தல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

உ.பி.யில் நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்