மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம் எதுவும் இல்லை. பிரதமரின் பேச்சில் பொய்யும் பிரிவினையும் உள்ளது : அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை : வாக்குக்காக பிரதமர் மோடி பொய் பேசுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டியில், “கடந்த கால பிரதமர்கள் தங்களது வார்த்தைகளில் கவனமாக இருந்தார்கள். ஆனால் பிரதமரே நாட்டு மக்களை பிரித்து பேசுவது தவறான செயல். இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என பிரதமர் பேசுவதை ஏற்க முடியாது. மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம் எதுவும் இல்லை. பிரதமரின் பேச்சில் பொய்யும் பிரிவினையும் உள்ளது. தமிழர்களின் மாண்பை கொச்சைப்படுத்துகிறார் பிரதமர் மோடி.

அப்பட்டமான பழியை தமிழர்கள் மீது கூறுவதை எப்படி ஏற்க முடியும்?. இந்துக்களின் வாக்கு வங்கியை கவரவே பிரதமர் இப்படி பேசுகிறார். பி.கே.பாண்டியனின் பணியை ஒடிசா மக்கள் பாராட்டுகின்றனர். ஒடிசாவில் பாஜக நுழைய முடியவில்லை என்பதால் இப்படி பேசுகின்றனர். குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது ஏன்?.ராமர் கோவிலுக்கு கங்கனாவிற்கு அழைப்பு, முர்முவுக்கு மறுப்பு ஏன்?.பிரிவினை அரசியலை பேசுகிறார் பிரதமர் மோடி.இடத்திற்கு ஏற்றப்படி சந்தர்ப்பவாதமாக பேசுகிறார் பிரதமர்,”இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக ஒடிசாவின் கட்டாக் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பிஜு ஜனதா தளத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை கடுமையாக விமர்சித்தார். 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினார். பிரதமரின் இந்த அவதூறான பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு