மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டம் : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

சென்னை: கலசபாக்கம் தொகுதி மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ள ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் தமிழக சட்டப்பேரவை, கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக சட்டசபையில் கேள்வி – பதில் நேரத்தில், கலசப்பாக்கம் தொகுதி, கலசப்பாக்கம் ஒன்றியம், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா எனவும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அந்த பணிகள் தொடங்கப்படுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கை மத்திய நீர்வளத் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.Dam safety review மூலமும் அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளோம்.அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” எனவும் கூறினார்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்