கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை : கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிதி வழங்காததைப் பற்றி பேசாமல் பாஜகவினர் மகா விஷ்ணுவைப் பற்றி பேசுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், “மணப்பாறையில் ஜாபில் நிறுவன தொழிற்சாலை அமைவதால் திண்டுக்கல் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறுவர். மணப்பாறையில் ஜாபில் நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் தற்போது திருச்சிக்கு வர உள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!