இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை திரும்ப வழங்குவது சாத்தியமற்றது: இலங்கை அமைச்சர்

கொழும்பு: இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை திரும்ப வழங்குவது சாத்தியமற்றது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என இலங்கை அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக இலங்கை அமைச்சர் அளித்த பேட்டியில்:
கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமா? இலங்கைக்கு செந்தமா? என கேட்க்கும் போது இந்தியா தரப்பில் அவர்களுக்கு செந்தம் என கூறப்படுகிறது. அதேபோல் இலங்கை தரப்பில் எங்களுக்கு சொந்தம் என சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் காலகட்டத்தில் இவ்வாறாக பேசப்படுகிறது.

1974-ம் ஆண்டு கச்சதீவு தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடல் தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை கடல் தொழிலாளர்கள் இந்திய கடல் பரப்புக்குள்ளும் சென்று இருந்தது. பின்னர் 1976-ம் ஆண்டு அந்த ஒப்பந்தம் மாற்றபட்டு அது தடுக்கப்பட்டது. இதில் கச்சதீவை திரும்ப கொடுப்பதற்க்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தற்போது கச்சதீவை கொடுத்தால் இந்திய மீனவர்கள் இலங்கை நோக்கி 1 கி.மீ கடலுக்குள் வந்து தொழில் செய்வார்கள். அது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. வளங்களை அழிக்கின்ற, எங்கல் மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் செயலை அனுமதிக்க முடியாது என அவர் கூறினார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு