தினை கத்திரிக்காய் சாதம்

தேவையானவை

தினை சாதம் – ஒரு கப்
கத்திரிக்காய் – 3
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
முந்திரிப்பருப்பு – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் –
சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
புளித்தண்ணீர் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பொடி செய்ய

மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – ஒன்று
கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

வெறும் வாணலியில் முதலில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும். வாசனை வந்ததும் அதனுடன் மல்லி, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். கடைசியாக, கொப்பரைத் தேங்காய்த்துருவலைச் சேர்த்து வறுத்து இறக்கவும். பின்னர் இதைக் கொரகொரப்பாகப் பொடி செய்துகொள்ளவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி சில நிமிடங்கள் வேகவிடவும். பிறகு புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதில் தயார் செய்து வைத்திருக்கும் பொடியைத் தேவைக்கேற்ப சேர்த்துக் கொதிக்கவிட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்துக் கிளறி இறக்கவும். இதைத் தினை சாதத்துடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்