தினை கேரட் அல்வா

தேவையானவை

வறுத்த தினை – அரை கப்
கேரட் – 5 (துருவவும்)
காய்ச்சிய பால் – 2 கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரி – 10
உலர்திராட்சை – 10
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை

பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், தினை சேர்த்து, பால் ஊற்றி, மூன்று விசில்விட்டு இறக்கவும் (தேவைப்பட்டால் கொடுத்திருக்கும் அளவைவிடக் கூடுதலாகப் பால் ஊற்றிக்கொள்ளலாம்). ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் காயவிட்டு, முந்திரி, உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் குக்கரில் வேகவைத்த கேரட் விழுதை அதே வாணலியில் ஊற்றி 10 – 15 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கிளறவும். கலவையானது கெட்டியாகும் வரை வேகவிடவும். பின்னர் இதில் சர்க்கரை சேர்த்துக் கிளறி கடைசியாக மீதி நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து
இறக்கவும்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்