பால் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஆவின் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 14.5 லட்சம் லிட்டர் பாலினை சென்னை பெருநகரில் விற்பனை செய்து வருகிறது. இப்பாலினை, சென்னையில் பகுதிவாரியாக விநியோகம் செய்ய 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வொப்பந்த வாகனங்களில் ஏற்றப்படும் பால்பாக்கெட்களின் எண்ணிக்கை ஆவின் பணியாளர்களால் முறையாக கண்காணிக்கப்பட்டு வாகனத்தின் எடை சரிபார்க்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு பணியாளர்களால் கூடுதல் பால் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்து விநியோகத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அம்பத்தூர் பால்பண்ணையில் ஒப்பந்த வாகனத்தில் (தடம் எண் 15) கூடுதல் பால்பாக்கெட்டுகள் ஏற்றப்பட்டது. இது சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒப்பந்த வாகனம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று தவறுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்