மில்க் கேக்

தேவையானவை:

பால் – ஒரு லிட்டர்,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் – 2 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி,
தண்ணீர் – 1 தேக்கரண்டி.

செய்முறை:

எலுமிச்சை சாறுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். பால் நன்றாக வற்றி, கால் பாகமாக மாறியதும், எலுமிச்சைசாறு, தண்ணீர் கலவையை சேர்த்து கலக்கவும். பின்னர் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி, பால் கலவையைக் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் அந்த தட்டை லேசாக சூடு செய்து, அகலமான தட்டில் தலை கீழாக கவிழ்த்தால், கேக்கானது தட்டிலிருந்து வெளியே வந்து விடும். அதை துண்டுகளாக்கி உபயோகிக்கலாம். சுவையானது, செய்வது எளிது, அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி