ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு?

மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்தில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செவா்னி விமானதளத்திலிருந்து 8 விமானப் பணியாளா்கள் 7 பயணிகளுடன் ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான ஐஐ-76 ரக விமானம் நேற்று புறப்பட்டது. அப்போது அதன் என்ஜினில் தீப்பிடித்ததால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது அருகிலுள்ள இவானொவோ விமானதளத்தின் ஓடுபாதையை நோக்கி செலுத்தப்பட்டது. தரையிறங்க முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவோனாவோ பகுதியில் இந்த ராணுவ சரக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது, என்ஜினில் தீப்பிடித்ததால், கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் 15 பேர் பயணம் செய்ததாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தீப்பற்றி எரிந்தபடி, விமானம் கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related posts

சைபர் குற்றங்கள்: தென்மண்டல ஐ.ஜி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

ஆன்லைனில் வழக்கறிஞர் சேவைக்கு எதிராக நடவடிக்கை: இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு