ராணுவ அகாடமியில் குரூப் சி பணியிடங்கள்

இந்திய ராணுவ அகாடமியில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வேரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. MT Driver (Ordinary Grade): 7 இடங்கள் (பொது-5, எஸ்சி-2). சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. LDC: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-2). சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3. Cook Special: 2 இடங்கள் (ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-10. சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய உணவுகளை சமைப்பதில் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
4. Waiter: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Groundsman: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. MTS (Chowkidar): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
7. Groom: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. MTS (Messenger): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 லிருந்து 25க்குள். பணி எண்: 1க்கு 18 லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.50/-. இதை இந்தியன் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசி யினருக்கு கட்டணம் கிடையாது.
போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டிய முகவரி: The Commandant, Indian Military Academy, Dehradun.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in/WhatsNew என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Commandant, Indian Military Academy, Dehradun.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2023.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி