ராணுவ பள்ளியில் ஆசிரியர் மற்றும் நூலகர் பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. Trained Graduate Teachers (TGT): 5 இடங்கள். வயது: 21 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.35,000. தகுதி: Maths/Social Science/General Science/Hindi Language ஆகிய பாடங்களில் ஏதாவதொரு பாடத்தை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் சி-டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Counsellor: 1 இடம். வயது: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.25,000. தகுதி: Psychology பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Guidannce & Counselling பிரிவில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Child Development/Career Guidance and Counselling பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Laboratory Assistant (Science Lab): 2 இடங்கள். வயது: 21 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.25,000. தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்எஸ்- ஆபீசில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. Librarian: 1 இடம். வயது: 21 முதல் 35க்குள். சம்பளம்: ரூ.30,000. தகுதி: நூலக அறிவியல் பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்து கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sainikschoolamethi.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.06.2024.

Related posts

பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விபத்து: 15 நாளில் 7வது சம்பவம்

நாடாளுமன்றத்தில் மணிப்பூரின் 2வது எம்பியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா