மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ம் தேதியை அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மிலாது நபியை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை தினமாக அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி பிறை தென்படவில்லை.

எனவே, செப்டம்பர் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாது நபி கொண்டாடப்படும் என்றும் தலைமை காஜி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி செப்டம்பர் 16ம் தேதிக்கு பதிலாக, செப்டம்பர் 17ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறை அனைத்து மாநில அரசு நிறுவனங்கள், கார்ப்பரேசன்கள், போர்டுகள் போன்றவற்றுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து