தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட டூவீலர்களுக்கு இலவச பழுது பார்ப்பு முகாமை டிவிஎஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் டூவீலர்களை பழுது பார்க்க இந்த முகாமை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாகனத்தை அருகில் உள்ள டிவிஎஸ் டீலர் மையங்களுக்கு கொண்டுவரவும் ஏற்பாடு செய்யப்படும். 8ம் தேதி துவங்கிய இந்த முகாம் 18ம் தேதி வரை இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.