மிக்ஜாம் புயல் மழை காரணமாக அரையாண்டு தேர்வு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி முடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் இன்றும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என்று ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இது தள்ளிவைக்கப்படுகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தொடர் மழை காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேனிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி 11ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பாடத் தேர்வுகள் அந்தந்த தேதிகளில் நடக்கும். 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் மட்டும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடத்தப்படும். இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி அளவில் கேள்வித்தாள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும். 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்