மிக்ஜாம் புயல் எதிரொலி: தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைப்பு..!!

சென்னை: தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரண பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கப்பதற்கான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

நிவாரண முகாம்களிலில் மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் நிவாரணம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பிஸ்கட், பால், பால் பவுடர், பாய், போர்வை, பழ வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நிவாரண பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 73977 66651 என்ற வாட்ஸஅப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பல தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டிருக்கியது.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு