மிக்ஜாம் புயல் பாதிப்பை சரிசெய்ய தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ₹8000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து புயல் பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் பாதித்துள்ளது. குறிப்பாக சாலைகள் அனைத்தும் நீரால் சூழ்ந்துள்ளது மட்டுமில்லாமல், துண்டித்தும் உள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதில் மிக்ஜாம் புயல் பாதிப்பை சரி செய்யும் விதமாக தமிழ்நாட்டுக்கு ரூ.8000 கோடி நிவாரணமாக ஒதுக்கீடு செய்து விடுவிக்க ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். அதிலும் குறிப்பாக ரூ.3000 கோடியை இருக்கும் அவசர சூழலை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது: ஐகோர்ட்டில் அரசு வாதம்

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இன்று முதல் விவரங்களை பதிவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு