மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனை படைத்தது “என்விடியா”!!

வாஷிங்டன் : மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை தனக்காக்கி கொண்டுள்ளது என்விடியா நிறுவனம். என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட ஒரு அமெரிக்க பண்பாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 1993ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் கம்பியூட்டர் சிப்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரித்து வந்த நிலையில், பின்னர் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

இதன் விளைவாக சில நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்தது என்விடியா. இந்த நிலையில், பங்குச் சந்தைகளில் என்விடியாவின் பங்குகள், 3.4% அளவிற்கு ஏற்றம் கண்டது. இதனால் என்விடியாவின் சந்தை மூலதனம் 3 லட்சத்து 34,000 கோடி டாலராக அதிகரித்தது. இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை என்விடியா நிறுவனம் படைத்துள்ளது. 2024ல் மட்டும் என்விடியாவின் சந்தை மதிப்பு சுமார் 175% அளவிற்கு உயர்வினை கண்டுள்ளதால் அதன் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது