எம்ஜி மோட்டார் நிறுவனம்

ஒன்றிய அரசின் புதிய வாகன கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் விதிகள் போன்றவற்றாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வாலும் இந்தியாவில் வாகனங்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்த வரிசையில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. மாடல்களுக்கு ஏற்ப பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.16,000 முதல் ரூ.30,000 வரையிலும், டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.22,000 வரையிலும், பிளாக்ஸ் ஸ்டோர்ம் விலை ரூ.25,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஹெக்டார் ஷைன் புரோ 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் துவக்க ஷோரூம் விலை ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.16.16 லட்சமாக அதிகரித்தள்ளது. ஹெக்டார் வரிசையில்பெட்ரோல் வேரியண்ட் டாப் மாடலான பிளாக்ஸ்டோர்ம் 2 லிட்டர் டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ.22,000 உயர்ந்து ரூ.22.24 லட்சமாக உயர்ந்துள்ளது. டீசல் வேரியண்டில் செலக்ட் புரோ ஷோரூம் விலை சுமார் ரூ.20,000 உயர்ந்து ரூ.18.2 லட்சமாகவும், பிளாக் ஸ்டோர்ம் 6எஸ் சுமார் ரூ.23.08 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியர் கைது..!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு