மேட்டூர் அனல் மின்நிலையத்தின் 2-வது பிரிவில் கொதிகலன் குழாயில் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு..!!

சேலம்: மேட்டூர் அனல் மின்நிலையத்தின் 2-வது பிரிவில் கொதிகலன் குழாயில் வெடிப்பால் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், இரண்டாம் பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இரண்டையும் சேர்த்து 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2-வது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்த பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு