மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,753 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,371 கன அடியில் இருந்து 2,753 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.87 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர் இருப்பு 32.589 டிஎம்சியாக உள்ளது.

நீர்வரத்தைக் காட்டிலும், தண்ணீர் வெளியேற்றம் குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 69.63 அடியாகவும், நீர் இருப்பு 32.38 டிஎம்சியாகவும் இருந்தது. 4,000 கனஅடி நீர்வரத்து: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 11ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்தது.

12ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைந்தது. அன்று முதல் 14-ம் தேதி வரை அதே அளவுடன் மாற்றமின்றி நீர்வரத்து தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று காலைநீர்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலையிலும் நீர்வரத்து 4,000 கனஅடியாகவே தொடர்ந்தது.

Related posts

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்