மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியாக இருந்த நிலையில் இன்று 84 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியாக இருந்த நிலையில் இன்று 84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 73,654 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 72,731 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி சற்று குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,654 கன அடியாக இருந்த நிலையில் இன்று 4 மணி நிலவரப்படி சற்று குறைந்து 72,731 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

அதே போல மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடி வீதம் வெளியேற்றப்படும் நிலையில் அணையின் நீர்மட்டம் 84 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தொடந்து உயர்ந்துகொண்டிருப்பதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 1,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 43.978 டி.எம்சி.யாக உள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகளை தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு

கடல் சீற்றத்தால் 5 அடி உயரம் எழும்பிய அலை: மாமல்லபுரத்தில் மீனவர்கள் அச்சம்