மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 693 கனஅடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த வண்ணம் உள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 901 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 693 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும், தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 71.18 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 71.21 அடியாக உயர்ந்தது.

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்