சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,963 கனஅடியில் இருந்து 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 55.697 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.62 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.