மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40,018 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 31,102 கன அடியில் இருந்து 40,018 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்துள்ளது.

Related posts

தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா: முதலமைச்சர் புகழாரம்

திமுக பவளவிழா இலச்சினையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

மாட்டு வண்டி பந்தயத்தில் அதிர்ச்சி: காளைகள் மிதித்து தொழிலாளி பலி