மேட்டூர் அணையிலிருந்து கால்வாய்களில் பாசனத்துக்காக நீர் திறப்பு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவை அடுத்து எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் இணைந்து தண்ணீரை திறந்து வைத்தனர். மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இன்று முதல் டிச.13 வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்