மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் விடிய, விடிய கொட்டிய கனமழை; சாலைகள் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி

காரமடை: மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருப்பராயன் கோவில், தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவனாபுரம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களை தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. இதே போல் காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு