சென்னை ஐஐடியுடன் இணைந்து மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து உதவித்தொகையுடன் கூடிய புதிய பட்டய படிப்பை வழங்க உள்ளன. சமீபத்தில் பட்டம் முடித்த பட்டதாரிகளுக்கு, சென்னை ஐஐடியுடன் இணைந்து ‘மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை’ (பிஜிடிஎம்ஆர்டிஎம்) என்ற ஒரு வருட முதுநிலை பட்டயப் படிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) வழங்க இருக்கிறது.

இதில் சேர, பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் வரும் 29ம் தேதிக்குள் careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முழுநேர ஆண்டு படிப்பின்போது மாதம் ரூ.30,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். படிப்பை முடித்தவுடன், அவர்கள் நேரடியாக சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் மாதம் ரூ.62,000 சம்பளத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்படுவர்.

சிவில் அல்லது எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் பிஇ, பி.டெக், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிகல் இன்ஜினியரிங் முடித்து 70 சதவீத மார்க் எடுத்தவர்கள் மற்றும் கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை 044-24378000 என்ற எண் அல்லது http:// chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என சிஎம்ஆர்எல் தெரிவித்துள்ளது.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்