மெட்ரோ 2ம் கட்ட நிதி: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65 சதவீதத்தை ஒன்றிய அரசு வழங்கும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.7,425 கோடி மட்டுமின்றி, திட்டத்துக்கான ரூ.33,593 கோடி கடனுக்கும் ஒன்றிய அரசு ஏற்பாடு செய்யும். தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ரூ.32,548 கோடி கடன் பெற்று சென்னை மெட்ரோ 2 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், தமிழ்நாடு அரசு பெற்ற கடன்கள் ஒன்றிய அரசின் கடனாக கருதப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு