தென்மேற்கு அரபி கடலில் நிலைகொண்டுள்ள ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

டெல்லி: தென்மேற்கு அரபி கடலில் நிலைகொண்டுள்ள ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. நேற்று முன் தினம் காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை தென்மேற்கு அரபிக்கடலில் தேஜ் புயல் உருவானது. இதனை தொடர்ந்து தேஜ் புயல் தீவிர புயலாக நேற்று மாலை வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப்புயலாகவும் வலுப்பெறக்கூடும் எனவும் 25ம் தேதி அதிகாலை ஓமன் – ஏமன் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு அரபி கடலில் நிலைகொண்டுள்ள ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேஜ் புயல் நேற்றிரவு 11.30 மணியளவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

 

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை