கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி மறுத்தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கினை தொடர்ந்து கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அந்த தேர்வுக்கான தேதி அறிவித்தும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது. நாடு முழவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன்4-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் 13,16,268 பேர் தேர்சி பெற்றிருந்தனர். இதில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அடுத்தடுத்த மதிப்பெண் கொண்ட 6 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தது சந்தேகத்தை கிழப்பியது. மேலும் இரண்டாம் பிடிக்கும் மாணவர்கள் 715 மதிப்பெண்கள் பெறப்படும் நிலையில் 719, 718 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவில் கருணை மதிப்பெண் என்பது சிலருக்கு வழங்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. பீகார் மாநிலத்தில் வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் எழுந்ததால் உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது பதிலளித்த தேசிய தேர்வு முகமை எந்த வித சிக்கலும் ஏற்படவில்லை, கருணை மதிப்பெண்கள் வழங்கியதால் தான் இந்த மாணவர்களுக்கு 719,718 ஆகிய மதிப்பெண்கள் வந்துள்ளதாகவும், தேர்வில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தது.

இந்த நிலையில் கருணை மதிப்பெண் வழங்கியது தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி அடுத்த மாதத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு ஜுன் 23 நடத்தவுள்ளதாகவும், தேர்வு முடிவுகள் ஜூன் 30ல் அறிவிக்கப்படும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். தேசிய தேர்வு முகமை பதிலை ஏற்று நீட் மறு தேர்வை நடத்திக் கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு