நினைவாற்றலை வளமாக்கலாம்

ஞாபக சக்தி என்று சொல்லப்படும் நினைவாற்றலை ஒவ்வொருவருமே அதிகரிக்க முடியும். நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்துவிடும். இந்த சென்சரி மெமரியில் நாம் முழுக் கவனத்தைச் செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆகப் பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும். ஷார்ட் டெர்ம் மெமரியை திரும்ப திரும்பத் செய்யும்போது அது நாள்பட்ட ஞாபக சக்தியாக(லாங் டெர்ம் மெமரி) மாறும்.முழு ஆர்வம் மற்றும் கவனம் செலுத்துதல், திரும்ப திரும்பச் செய்தல் போன்ற வழிமுறைகளால் நாள்பட்ட ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ளலாம். அதேசமயம்,ஒரு சில நாள்பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது. இதுவும் நல்லது தான். சில சமயம் சில தேவையில்லாத விஷயங்கள் வாழ்நாள் முழுதும் நினைவில் இருக்கும். அது மறக்கப்படுவது நல்லதுதான்.

நாள் பட்ட ஞாபகத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று Explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும், மற்றொன்று Implicit என்பது அதிகம் யோசிக்காமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.
இதற்கு உதாரணமாக மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக்கொள்வோம், யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது சென்சரி மெமரி. முதன் முதல் ஓட்ட கற்றுக்கொள்வது ஷார்ட் டெர்ம் மெமரி. தத்தி தத்தி ஓட்டுவது ஷார்ட் டெர்ம் (explicit) மெமரி. யார் உதவியும் இல்லாமல் நாமே ஓட்டுவது லாங் டெர்ம் (implicit) மெமரி சாகும் வரை மறக்காது. இந்த லாங் டெர்ம் மெமரிக்கான பயிற்சி மாணவர்களுக்கு மிக மிக அவசியமானது. போட்டித்தேர்வுகளில் மட்டுமல்ல தான் தேர்ந்தெடுக்கும் துறைகளிலும் வெற்றி வாகை சூட கைகொடுக்கும்.

நினைவுத்திறனை அதிகரிக்க சில வழிகள்

நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ எதுவாக இருந்தாலும் உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும். புரியாமல் எதையும் படிக்கக்கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை. படிப்பதைப் புரிந்து படியுங்கள். மேலும் முழுக் கவனமும் மிக அவசியம். அதேபோல் படித்தவுடன் எழுதிப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் பாடங்களைக் கடமைக்கு எழுதும் சடங்கால் எந்த பயனும் இல்லை.பொதுவாகப் படங்களுடன் கூடிய தகவல்களை எளிதில் மனதில் பதியு செய்ய பட விளக்கங்களை திரும்பத் திரும்ப வரைந்து பார்க்கச் சொல்ல வேண்டும். அதேபோல் சாதாரணமாகவே அனைவருக்கும் நல்ல உறக்கம் மிக மிக அவசியம். குறைந்தது 8 மணி நேரத் தூக்கம் கண்டிப்பாகத் தேவை.இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை எழுந்து படிக்கும் 0 பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

தூங்கப் போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில பகுதிகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டே இருக்கும்.கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் மிக முக்கியமானதொரு பிரச்னையாக இருப்பது கற்பிக்கப்படுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும், கவனத்தில் நிலை நிறுத்தச் செய்வதுமாகும். அதனால்தான் மனப்பாடம் செய்த விஷயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் புரிதலுடன் உள்வாங்கிக்கொள்ளும் கற்றல் நீண்ட காலம் நினைவில் நிற்கிறது.

– முத்து

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு